ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்..!

Published by
murugan

2-வது ஆஷஸ் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையே ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. இருஅணிகளும் இடையே 5 டெஸ்ட்போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் கடந்த 08-ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இன்று இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்: 

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மைக்கேல் நெசர், மிட்செல் ஸ்டார்க், ஜே ரிச்சர்ட்சன், நாதன் லியான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்: 

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீத், டேவிட் மாலன், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாட் கம்மின்ஸ் நேற்று இரவு கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தததால் பாட் கம்மின்ஸ் 7 நாட்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி கேப்டனாக ஸ்மித் செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan
Tags: Ashes2021

Recent Posts

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

26 mins ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

1 hour ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

2 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

3 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

3 hours ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

3 hours ago