நியூசிலாந்து பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா! 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!

Published by
murugan

இன்று நடைபெறும் இரண்டாவது  போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி  லண்டனில்  உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு  உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.
 அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா , ஸ்மித் இவர்களின் கூட்டணியில் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  மத்தியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி , உஸ்மான் கவாஜா இவர்கள்  இருவரின் கூட்டணியில் அணியின் ரன்களை உயர்த்தினர்.

இவர்களின் நிதானமான ஆட்டத்தால் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவருமே  சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 88 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டையும் ,லாக்கி பெர்குசன் ,
ஜேம்ஸ் நீஷம் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர். நியூஸிலாந்து அணி 244 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.
 

Published by
murugan

Recent Posts

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 min ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

20 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

45 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

58 mins ago