நியூசிலாந்து பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா! 244 ரன்களை இலக்காக நிர்ணயித்தது!
இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகிறது . இப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது .இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய ஆரோன் பிஞ்ச் 15 பந்தில் 8 ரன்னில் வெளியேற பிறகு உஸ்மான் கவாஜா களமிறங்கினர்.
அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 16 பந்தில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். உஸ்மான் கவாஜா , ஸ்மித் இவர்களின் கூட்டணியில் அதிரடி காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஸ்மித் 5 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மத்தியில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி , உஸ்மான் கவாஜா இவர்கள் இருவரின் கூட்டணியில் அணியின் ரன்களை உயர்த்தினர்.
இவர்களின் நிதானமான ஆட்டத்தால் இருவருமே அரைசதத்தை நிறைவு செய்தனர்.பிறகு களமிறங்கிய வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்னில் வெளியேறினர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 243 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 88 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்து அணி பந்து வீச்சில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டையும் ,லாக்கி பெர்குசன் ,
ஜேம்ஸ் நீஷம் இருவரும் தலா 2 விக்கெட்டை பறித்தனர். நியூஸிலாந்து அணி 244 ரன்கள் இலக்குடன் களமிறங்கி உள்ளது.