ஆஸ்திரேலியாவை மண்ணை கவ்வ வைத்த மகளிரணி…!!!அசத்தல் வெற்றி…..!!
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 3 வது டி20 ஆட்டத்தில் இந்திய பெண்கள் ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.
டி20 பெண்கள் உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீலில் நடக்கவுள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் இந்திய பெண்கள் ஏ அணியும் ஆஸ்திரேலிய ஏ அணியும் டி20-3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்றது.2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 3 வது ஆட்டத்தில் களமிரங்கியது.
மும்பையில் நடந்த இந்த கடைசி போட்டியில் இந்திய அணி சார்பாக மித்தலிராஜ் (7) மற்றும் மந்தனா (5) ஜோடி ஏமாற்றிய நிலையில் தானியா (13)ரன்கள் எடுக்க ஜெமிமா 38 ரன்களை விளாசி ரன்னை உயர்த்தினார்.கேப்டன் ஹர்மன் ப்ரீத் ( 41) ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர்.கடைசி நேரத்தில் ஹேமலதா(16) மற்றும் திப்தீ(18) ரன்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.இந்திய அணி 20 ஒவரில் 154 ரன்களை எடுத்தது.
156 ரன்னை இலக்காக கொண்டு களமிரங்கிய ஆஸ்திரேலிய ஏ அணியில் களமிரங்கியவர்கள் வெறும் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 19.2 ஒவரில் 117 ரன்களை எடுத்து ஆல் அவுட்டானது.இதனால் 117 ரன்னிற்கு சுருட்டிய இந்திய மகளிரணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.மகளிரணியில் சிறப்பாக பந்து வீசிய பூனம் யாதவ் 3 விக்கெட்டுகளையும்,பூஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
DINASUVADU