தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டம் இங்கிலாந்திடம் திணறிய ஆஸ்திரேலியா !
இன்றைய இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும் ,ஆஸ்திரேலிய அணியும் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , ஆரோன் பிஞ்ச் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு ரன் கூட எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.பின்னர் டேவிட் வார்னர் 11 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
பின்னர் களமிங்கிய ஸ்டீவன் ஸ்மித் உடன் இணைந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னில் வெளியேறினர்.ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்த பரிதாப நிலையில் இருந்த போது அலெக்ஸ் கேரி , ஸ்டீவன் ஸ்மித் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் வந்தனர்.
இவர்கள் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. சிறப்பாக விளையாடி வந்த அலெக்ஸ் கேரி அரைசதம் அடிக்க முடியாமல் 46 ரன்னில் அவுட் ஆனார்.பின்னர் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன்கள் எடுக்காமல் வெளியேற அடுத்ததாக இறங்கிய க்ளென் மேக்ஸ்வெல் உடன் கைகோர்த்த ஸ்டீவன் ஸ்மித் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
பின்னர் மேக்ஸ்வெல் 22 ரன்னில் வெளியேற பிறகு இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவன் ஸ்மித் 85 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் அடித்தனர்.
இங்கிலாந்து அணி பந்து வீச்சில் கிறிஸ் வோக்ஸ் ,ஆதில் ரஷீத் இருவரும் தலா 3 விக்கெட்டையும் ,ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர். 224 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கி உள்ளது.