சவால சந்திக்க மரண வெய்டிங்க்..விராட் சுறுக்.!
ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி பெரும்பாலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2018 மற்றும் 19ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.அப்போது அடிலெய்ட் டெஸ்ட்டை பகல் மற்றும் இரவு ஆட்டமாக விளையாட தனது சம்மதத்தை தெரிவிக்கவில்லை. தற்போது பிசிசிஐயின் தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ள பிறகு இந்த பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆட்டமானது பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆட்டம் தான் இந்திய அணி விளையாடிய முதல் பகலிரவு டெஸ்ட் ஆகும்.இந்நிலையில், இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்.அந்தப் பயணத்தின்போது காபா டெஸ்ட்டை பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக விளையாட இந்தியா சம்மதம் தெரிவிக்கும் என்று ஆஸ்திரேலியா எதிர்பார்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடரின்போது இது குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, “பகலிரவு டெஸ்ட் சவாலுக்கு நாங்கள் தயார். அது காபா அல்லது பெர்த் என்று எதுவாக இருந்தாலும் சரி. எங்களுக்கு இது குறித்து கவலையில்லை.
தற்போது பகலிரவு டெஸ்ட் ஆனது டெஸ்ட் தொடருக்கு உற்சாகமான அம்சமாக உருவெடுத்து உள்ளது. எனவே, நாங்களும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி பகலிரவு டெஸ்ட்டில் விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகிய நிலையில். இதில் இந்திய அணி பெரும்பாலும் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடும் என்று கூறப்படுகிறது.