19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 16-வது போட்டியாக இன்று ஆஸ்திரேலியா அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதியது. அதில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது.
களமிறங்கிய அனைத்து வீரரும் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை சிதறிடித்தனர். அதிலும் தொடக்க வீரரான ஹாரி டிக்சன் மிக சிறப்பாக விளையாடி 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 296 ரன்கள் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 297 என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி படு மோசமாக விளையாடி இறுதியில் 23.2 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்து படு தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா அணியில் ஹர்கிரத் பஜ்வா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 225 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…