டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி, இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரின் 2-வந்து வெற்றியை பதிவு செய்தது.
நடைபெற்று வரும் டி20 போட்டியில் இன்றைய 17-வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் பார்படாஸ்ஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மோதினார்கள். இந்த போட்டியானது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வார்கள். அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் களமிறங்கி விளையாடுவார்கள். களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் 30+ ரன்களுக்கு மிகாமல் ரன்களை எடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 18 பந்துக்கு 34 ரன்கள், டேவிட் வார்னர் 16 பந்துக்கு 39 ரன்கள், மிட்செல் மார்ஷ் 35 ரன்கள், ஸ்டோய்னிஸ் 30 ரன்கள் என அனைத்து பேட்ஸ்மேன்களும் இங்கிலாந்து பவுலர்களையும் பதம் பார்த்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து இமாலய இலக்கான 202 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து அணி. அதன்படி தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்தனர் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லரும், ஃபிலிப் சாலட்டும். இருவரும் இணைந்து அதிரடி காட்டி, ஆஸ்திரேலியா அணிக்கு பயத்தை காட்டினராகள்.
அதன் பிறகு ஃபிலிப் சால்ட் 37 ரன்களுக்கு, ஜாம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து பட்லரும் 42 ரன்களுக்கு அதே ஜாம்பாவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க போட்டி ஆஸ்திரேலியா அணியின் பக்கம் சரிந்தது. அவரை தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி பொறுமையுடன் அணிக்காக ரன் சேகரித்து வந்தார்.
அவரும் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணியின் கையைவிட்டு போட்டி முற்றிலும் நழுவியது. அதன் பிறகு எந்த ஒரு வீரரும் இங்கிலாந்து அணியில் சரிவர விளையாடாததால், இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜாம்பா மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இத்தொடரின் 2-வது வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…