தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா!!சொந்த மண்ணில் தொடரை இழந்தது இந்தியா!!
- இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.
கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இந்த போட்டி டெல்லியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் அடித்ததுள்ளது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் க்வாஜா 100,பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 52 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3,சமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.இதன் பின்னர் 273 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்கியது.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஏற்கனவே 2 போட்டிகள் கொண்ட டி-20 போட்டியை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.