இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.இன்று 3-வது ஒரு நாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளது.இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.தொடக்க ஜோடியான வார்னர் மற்றும் பின்ச் சரியான தொடக்கத்தை அமைக்காமல் ஏமாற்றினார்.வார்னர் 3 ,பின்ச் 19 ரன்களிலும் வெளியேறினார்கள்.
இதன் பின்பு வந்த ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக அரைசதத்தை கடந்த நிலையில் மார்னஸ் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவர் விக்கெட்டை இழந்தவுடன் ஸ்டார்க் களமிறங்க அவரும் வந்த வேகத்தில் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறினார்.ஆனால் விக்கெட்டுகள் ஒரு புறம் சரிந்தாலும் மறுபுறம் ஸ்மித் நிதானமாக விளையாடி சதம் அடித்தார்.பின்னர் வந்த வீரர்கள் ஜொலிக்க தவறினார்கள்.டர்னர் 4 ரன்கள் ,சம்பா 1,கம்மின்ஸ் ரன் எதுவும் அடிக்காமல் வெளியேறினார்கள்.நிலைத்து நின்று ஆடிய ஸ்மித்தும் 131 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் அடித்தது.களத்தில் அகர் 11 * ரன்களுடனும்,ஹெசல் வுட் 1* ரன்னுடனும் இருந்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் சமி 4,ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இதனையடுத்து 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…