ஆஷஸ் டெஸ்ட்: கடைசி நாள் போட்டியில் 397 ரன்கள் இலக்காக வைத்த ஆஸ்திரேலியா!

Default Image

இங்கிலாந்து அணி ,ஆஸ்திரேலிய அணி இடையே  ஆஷஸ் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது.டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன்கள் எடுத்தது.

Image result for The Ashes Test

பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழந்து 267 ரன்கள் அடித்து இருந்தனர். பிறகு  3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சை நிறைவு செய்தது.

ஆஸ்திரேலிய அணி  90 ரன்கள் பின்தங்கிய நிலையில் நேற்று முன்தினம் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் , கேமரூன் பான்கிராப்ட் இருவரும் களமிங்கிய வேகத்தில் சொற்ப ரன்னில் வெளியேறினார்.

Image result for The Ashes Test

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 34 ரன்கள் முன்னிலையில் இருந்தது.இதை தொடர்ந்து நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை  ஆஸ்திரேலிய அணி தொங்கியது.

டிராவிஸ் ஹெட் , ஸ்டீவன் ஸ்மித் நிதானமாகவும் , சிறப்பாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 51 ரன்னில் அவுட் ஆனார்.

பிறகு மத்தேயு வேட் , ஸ்டீவன் ஸ்மித்  இருவரும் கைகோர்த்தனர்.  நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய  ஸ்டீவன் ஸ்மித் 207 பந்தில் 142 ரன்கள் குவித்தார். அதில் 14 பவுண்டரி அடங்கும்.

Rory Burns was out early, fencing at a short ball and caught at point

இதையடுத்து  மத்தேயு வேட் 110 ரன்னில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலிய அணி 112 ஓவரில் 7 விக்கெட் இழந்து 487 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தங்களது இரண்டாம் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது.

முதல் போட்டியின் இன்றைய  கடைசி நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 397 ரன்கள் இலக்குடன் 1 விக்கெட்டை இழந்து 34 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy