சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா!! 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
டி20I : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் ‘B’ பிரிவில் இடம்பெற்றுள்ள அணியான ஆஸ்திரேலியா அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த ஆண்டில் நடைபெற்று வரும் டி20உலகக்கோப்பை தொடரில் இன்றைய 24-வதுபோட்டியாக நமீபியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய நமீபியா அணி, ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சால் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அதிலும் ஆஸ்திரேலியா சுழற் பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பாவின் சூழலில் சிக்கி தடம் புரண்டது நமீபியா அணி.
இதனால் நமீபியா அணி 17 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 72 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனை தொடர்ந்து எளிய இலக்கான 73 ரன்களை எடுக்க ஆஸ்திரேலிய அணி பேட்டிங் களமிறங்கியது. பேட்டிங் களமிறங்கியது முதல் வார்னர் (8 பந்துக்கு 20 ரன்கள்), ஹெட் (17 பந்துக்கு 34 ரன்கள்) மற்றும் மிட்செல் மார்ஷ் (9 பந்துக்கு 18 ரன்கள்) என மூவரின் அதிரடியில் 5.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 74 ரன்களை எடுத்து அபார வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், மறுமுனையில் நடந்த மற்றொரு போட்டியில் இலங்கை அணியும், நேபால் அணியும் மொத்தவிருந்த இந்த தொடரின் 23-வது போட்டியானது மழையால் நடைபெறாமல் போனது, இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.