பிசிசிஐ : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்ரேலியா முன்னாள் வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான செய்தி உண்மை இல்லை என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் 50 ஓவர்கள் போட்டியில் இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பணியாற்றி வந்த நிலையில், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு அவருடைய பயிற்சி காலம் முடிந்துவிடும். எனவே, அவருக்கு அடுத்ததாக எந்த வீரர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக யார் வருவார் என்ற கேள்வி எழும்பியது.
இதனையடுத்து, ஒரு செய்தியும் ரொம்பவே வைரலானது. அது என்னவென்றால், ராகுல் ட்ராவிட் பதவிக்காலம் முடிந்த பிறகு, இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய தலைமை பயிற்சியாளரை தேடி வருவதாகவும், இதற்காக ஆஸ்ரேலியா வீரர் ஒருவரை தேர்வு செய்யவும் அதற்காக சில வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இந்த தகவலுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியீட்டு இருக்கிறார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது “நானும் , இந்திய அணியின் கிரிக்கெட் வாரியமோ, இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய எந்த ஒரு ஆஸ்ரேலியா வீரரையும் அணுகவில்லை. அப்படி அணுகியதாக பரவும் தகவல் எல்லாம் உண்மையில்லாத ஒன்று. எனவே, யாரும் இது போன்ற செய்தியை நம்பவேண்டாம்.
இந்திய அணிக்கு பயிற்சியாளரை தேர்வு செய்வது என்பது முக்கியமான வேளைகளில் ஒன்று. இந்திய அணியை பற்றி முழுவதுமாக தெரிந்த்து கொண்ட ஒருவரால் மட்டும் தான் பயிற்சியாளராக இருந்தால் சரியாக இருக்கும். எனவே, வதந்தி செய்திகளை நம்பவேண்டாம் இந்திய அணியை முன்னோக்கி எடுத்து செல்லக்கூடிய ஒரு அருமையான பயிற்சியாளரை பிசிசிஐ தேர்ந்தெடுக்கும்” பிசிசிஐயின் அதிநவீன உள்ளகப் பயிற்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கூறி இருந்தார்.
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…