பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வி..!

Published by
murugan

இன்று பெங்களூருவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்த இந்திய அணி இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து  160 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக  ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும்,  அக்சர் படேல் 31 ரன்களும் , ஜிதேஷ் சர்மா 24 ரன்களும்  எடுத்தனர்.  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும், கேப்டன் சூரியகுமார்  யாதவ் 5 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர். ஆஸ்திரேலிய அணியில் பென் ட்வார்ஷூயிஸ், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தலா 2 விக்கெட்டையும், ஆரோன் ஹார்டி, நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

161 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி  20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணியில் பென் மெக்டர்மோட் 54 ரன்களும், டிராவிஸ் ஹெட் 28  ரன்களும், கேப்டன் மேத்யூ வேட் 22 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணியில்  முகேஷ் குமார் 3 விக்கெட்டையும்,  ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டையும் ,  அக்சர் படேல்  1 விக்கெட்டை பறித்தனர். சுழல் பந்துவீச்சார்கள் ரவி பிஷ்னோய், அக்சர் படேல் சிறப்பாக பந்து வீசினர். அதிலும் குறிப்பாக அக்சர் படேல் 4 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை பறித்தார். ரவி பிஷ்னோய்  4 ஓவரில் 29 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் பறித்தார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆஸ்திரேலிய அணி மூன்றாவது போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள நான்கு போட்டியிலும்  இந்திய அணி வெற்றி பெற்றது.

Recent Posts

LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!

சென்னை :  கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…

15 minutes ago

ரொம்ப மகிழ்ச்சியா இங்க தான் இருக்கேன்…நேரலையில் வந்த நித்யானந்தா! வீடியோ இதோ..

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

55 minutes ago

பிரதமர் மோடி நண்பர் தான் ஆனா இந்தியா 26 வரி கொடுக்கணும்! டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…

2 hours ago

சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!

பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் ஜில் அலர்ட்!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…

2 hours ago

மக்களவையில் நிறைவேறியது வக்பு சட்டத்திருத்த மசோதா! எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி தலைவர்கள்!

டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…

3 hours ago