ஆஸ்திரேலியா 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி.. 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா ..!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டைகளை இழந்து 235 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் கிஷன் 52 ரன்களும் எடுத்தனர். கடைசியில் களம் இறங்கிய ரிங்கு சிங் 9 பந்தில் இரண்டு சிக்சர், 4 பவுண்டரி என 31* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
236 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் பறிகொடுத்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக கேப்டன் மேத்யூ வேட் 48* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மார்க் ஸ்டானிக்ஸ் 45 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னாய் தலா மூன்று விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் தலா விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.