3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலை..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இறங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 45 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்தனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஹனுமா விஹாரி, அஸ்வின் மற்றும் பும்ரா ஆகியோர் ரன் அவுட் செய்யப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் 4, ஹேசில்வுட் 3, ஸ்டார்க் 1 விக்கெட்டை பறித்தனர். இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக இறங்கிய டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி இறங்கினர். இவர்கள் இருவரும் வந்த வேகத்தில் டேவிட் வார்னர் 13, வில் புகோவ்ஸ்கி 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின் இறங்கிய மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் இருவரும் நிதானமாக விளையாடிய ரன்கள் சேர்த்தனர்.
3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது இந்திய அணியில் முகமது சிராஜ், அஸ்வின் இருவரும் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025