NZvsAUS : 30 வருடங்களாக சாதனை படைத்து வரும் ஆஸ்திரேலியா ..!
NZvsAUS : நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 2024-ம் ஆண்டின் சுற்று பயணத்தில் நியூஸிலாந்து அணி ஒரு வெற்றியை கூட பெறவிலை. நியூஸிலாந்துடன் நடைபெற்ற டி20 தொடரையும், டெஸ்ட் தொடரையும் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.
Read More :- NZvsAUS : தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா ..! ஆறுதல் வெற்றியை கூட பெறாத நியூஸிலாந்து ..!
இதில் வியப்படையும் விஷயம் என்னவென்றால் 1993 முதல் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த 29 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 26 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகள் சமநிலையில் (Draw) முடிந்ததுள்ளது.
மேலும், ஆஸ்திரேலியா கடந்த 30 வருடத்தில் நியூஸிலாந்து உடனான பல டெஸ்ட் தொடர்களில் விளையாடி வெறும் ஒரே ஒரு தோல்வியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த 30 வருடங்களாக நியூஸிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற விடாமல் இந்த சாதனையை படைத்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் பயிற்சி முறையும், போட்டிக்காக அணியை தேர்வு செய்யும் முறையே ஆகும்.
Read More :- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் கெத்து காட்டும் இந்திய கிரிக்கெட் அணி
டெஸ்ட் போட்டிகள் விளையாடும் பொழுது டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் சிறப்பான வீரர்களை மட்டுமே அணியில் வைத்து விளையாடுவார்கள். அப்படி அணியை தேர்ந்து எடுக்கும் போதுதான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியின் வாய்ப்பை ஒரு அணியால் அதிகரிக்க முடியும். இதனால் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி எப்போதுமே சிறந்து விளங்குகிறது.