ஒருநாள் தொடர் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த நன்மை !

இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
இந்த தொடர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி உலகக் கோப்பை சூப்பர் ஒன் டே லீக் புள்ளிகள் அட்டவணையில் ஒரு நன்மையை அளித்துள்ளது. இதன் மூலம்,ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை முந்தி 40 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி இப்போது 30 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒன்பது புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஐ.சி.சி யின் 2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் உலககோப்பைக்கு 13 அணிகளை கொண்ட உலகக் கோப்பை சூப்பர் ஒன் டே என்று இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதிலிருந்து நேரடியாக 7 அணிகள் உலககோப்பைக்கு தேர்வு செய்யப்படும். இதற்கு முந்தைய தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025