நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி 5 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்தது. மகளிர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இதுவரை அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலியா அணியில் அலிசா ஹீலி 138 பந்துகளில் 26 பவுண்டரிகளை விளாசி 170 ரன்கள் குவித்தார். 62 பந்துகளில் அரை சதத்தை அடித்த ஹீலி அடுத்த 38 பந்துகளில் சதம் விளாசினார்.
ஹீலி 170 ரன்கள் எடுத்ததன் மூலம் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக அடித்த ரன் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2005-ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 105 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் கரேன் ரோல்டனின் சாதனை முறியடித்தார்.
ஹீலி தொடர்ச்சியாக இரண்டாவது சதம் அடித்துள்ளார். அரையிறுதி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 129 ரன்கள் அடித்தார். ஹீலி தனது சதத்தின் மூலம் உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆஸ்திரேலிய அணியில் ஹீலியைத் தவிர ரேச்சல் ஹெய்ன்ஸ் (68), பெத் மூனி (62) ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 357 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 71 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்துக்காக நடாலி சிவர் சதம் அடித்தார். நடாலி சிவர் 121 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என மொத்தம் 148 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சார்பில் அலனா கிங் மற்றும் ஜெஸ் ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மேகன் ஸ்காட் 2 விக்கெட்டுகளையும், தாலியா மெக்ராத் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…