மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது.
இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையே 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசியது செய்தனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஹசீப் ஹமீத், சாக் கிராலி இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஹசீப் ஹமீத் டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன் 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் விளாசி தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பின்னர் மத்தியில் களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பென் ஸ்டோக்ஸ் 25, ஜானி பேர்ஸ்டோவ் 35 ரன்கள் எடுக்க பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 65.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், நாதன் லியோன் தலா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட் பறித்தார். இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தில் மீதம் இருந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், டேவிட் வார்னர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நிதானமாக விளையாடி வந்த டேவிட் வார்னர் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்து 16 ஓவரில் 61 ரன்கள் எடுத்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடன் நாதன் லியோன் 10 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 16, அலெக்ஸ் கேரி 19, கம்மின்ஸ் 21 ரன்களில் விக்கெட்டை அடுத்தடுத்து இழக்க தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ் சிறப்பான ஆட்டத்தால் 76 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக ஆஸ்திரேலிய அணி 87.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4, ஒல்லி ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால், ஆஸ்திரேலிய அணி 82 ரன்கள் முன்னிலையில் இருந்தபோது இங்கிலாந்து அணி தனது 2 இன்னிங்க்ஸை தொடங்கியது. இருப்பினும் ஆட்டம் தொடக்கத்திலிருந்தே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கு ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.
கேப்டன் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுக்க இறுதியாக இங்கிலாந்து அணி 27.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்ட் 6, மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டை பறித்தார்.
கடந்த 2017-18 ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது. 2019-ல் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்ததால் ஆஷஸ் கோப்பை ஆஸ்திரேலியாவிடம் உள்ளது. இரு அணிகளும் இடையே 4-வது டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…