AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!

AUSvENG AUS beat ENG by 5 wkts

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. பிற்பகல் 2.30 மணியளவில் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். பிலிப் சால்ட் 10 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 15 ரன்னிலும், ஹாரி புரூக் 3 ரன்னிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 14 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் 78 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார்.

பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 165 ரன்கள் எடுத்து மார்னஸ் லாபுசாக்னே வீசிய பந்தில் LBW விக்கெட் ஆனார். இதுவரை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பென் டக்கெட் அடித்த 165 ரன்கள் தான் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர் ஆகும்.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பென் டுவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும், மார்னஸ் லாபுசாக்னே 12 விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 50 ஓவர்களில் 352 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் களமிறங்கி விளையாடியது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.

இதில் டிராவிஸ் ஹிட் 6 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 5 ரன்னில் வெளியேறினாலும், மேத்யூ ஷார்ட் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மார்னஸ் லாபுசாக்னே 43 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் கேரி69 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 86 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் விளாசி 120 ரன்களுடனும், க்ளென் மேக்ஸ்வெல் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தும் களத்தில் நின்றனர்.

இறுதியில் 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்