ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாட தயாராகி வருகிறார். ஐபிஎல் 17-வது சீசன் ஏலத்தில் (ஐபிஎல் 2024 ஏலம்) தனது பெயரை கொடுக்கவுள்ளதாக கம்மின்ஸ் கூறினார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இருப்பதால் பயிற்சிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நான் டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடியதில்லை. சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டை விளையாட முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் எனது பெயர் பதிவு செய்யப்படும். எனவே உலகக்கோப்பைக்கு முன் கொஞ்சம் பயிற்சி பெறுவேன் என்று நம்புகிறேன். மேலும், டி20 போட்டிகளில் நான் எப்படி பந்துவீசுவேன் என்பதை அறிய விரும்புகிறேன் என கம்மின்ஸ் கூறினார்.
கம்மின்ஸ் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். 2022 ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இருப்பினும், சீசனின் நடுப்பகுதியில் கம்மின்ஸ் தொடை காயத்துடன் வீடு திரும்பினார். இருப்பினும் கம்மின்ஸ் கடந்த சீசனில் விளையாட ஆர்வம் காட்டவில்லை. 2024 டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் கூட்டாக நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான நேரம் நெருங்கி வருவதால் போட்டிகள் நடைபெறும் இடங்களை ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது. 20 அணிகளும் பங்கேற்கும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நடப்பு சாம்பியனாக களம் இறங்கவுள்ளது. இந்தியா நடத்தி வரும் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி முதல் போட்டியில் இந்தியாவிடமும், 2-வது போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்தது.
எனினும் இலங்கை அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் பாட் கம்மின்ஸ் அணி தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிப் போட்டியில் நுழைந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது மேக்ஸ்வெல் (201 ரன்கள் ) எடுத்து அணியை வெற்றி பெற செய்து ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆறாவது முறையாக உலகக்கோப்பையை துரத்தும் ஆஸ்திரேலிய அணி நவம்பர் 16-ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…
கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது…
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…