ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்; தகவல்.!
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற நிலையில் வென்றுள்ளது. இந்த தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியின் போது தனது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ், தாயகம் திரும்பியதால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார்.
தற்போது மார்ச் 17இல் இரு அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஒருநாள் அணிக்கும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட் கம்மின்ஸ் தாயார் உடல்நிலை சரியில்லாமல் கடந்த வாரம் உயிரிழந்தார், இதனால் அவர் இந்தியா திரும்புவது சந்தேகமாகியுள்ளது.
இதனால் இந்தியாவிற்கு எதிராக தொடங்கும் ஒருநாள் போட்டிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஸ்மித் செயல்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (C), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.
இந்திய அணி: ரோஹித் சர்மா (C), யுஸ்வேந்திர சாஹல், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, விராட் கோலி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக். , வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ்.