AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி. அணி தடுமாறி விளையாடி வருகிறது.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி விட்டதை பிடித்தது. இதன் காரணமாகவே, முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, 2-வது இன்னிங்க்ஸுக்கு பேட்டிங் விளையாடிய இந்திய அணி அந்த வாய்ப்பை விடாமல் தங்களுக்கு சாதகமாக பயப்படுத்திக் கொண்டது. அதன்படி, தொடக்க வீரரான கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் நங்குற ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இருவரும் அபாரமாக விளையாடியாதல் ராகுல் 77 ரன்களும், ஜெய்ஸ்வால் 161 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து விளையாடிய விராட் கோலியும் சதமடிக்க இந்திய அணியின் ஸ்கோர் உச்சம் பெற்றது. இதனால், இந்திய அணி தங்களது 2-வது இன்னிங்க்ஸுக்கு 487 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்தது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் அசுரத்தனமான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி பொட்டலமானது. முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
அதே போல இந்த இன்னிங்ஸ்லும் பந்து வீசிய அவர் தொடக்க வீரரை கழட்டினார். அவரைத் தொடர்ந்து பந்து வீசிய சிராஜும் சிறப்பாக விளையாடி 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும், இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தொடர் விக்கெட்டை இழந்தது.
ஒரு கட்டத்தில் ட்ராவிஸ் ஹெட்டும், மிச்சேல் மார்ஷும் நிலைத்து இந்திய அணியை திணறவைத்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக ஹெட் 89 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல மறுமுனையில் நிலைத்து விளையாடி வந்த மிட்செல் மார்ஸும் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஆஸி. அணி தற்போது, 182 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சொந்த மண்ணில் தடுமாறிய விளையாடி வருகிறது. அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு இன்னுமும் 352 ரன்கள் தேவைப்படும் நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் மட்டும் இருப்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்வது உறுதி என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.