AUS vs IND : ‘ஆல் ஏரியாலையும் கில்லி தான்’ …ஆஸியை கதிகலங்க வைத்து முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
பெர்த் : இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி இந்திய அணிக்கு ஒரு மிக முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
அதற்கு காரணம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி தான். முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி, முதல் இன்னிங்ஸ்க்கு 150 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியது.
ஆனால், ஆஸ்திரேலிய அணியும் எதிர்பாராத விதமாக சொதப்பியாதல் முதல் இன்னிங்க்ஸுக்கு வெறும் 104 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் பும்ராவின் அபார 5 விக்கெட்டின் பிரதிபலிப்பாலே ஆஸ்திரேலிய அணி இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 2-வந்து இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் வீரராகலான கே.எல்.ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பொறுப்புடன் விளையாடி அணிக்கான ரன்களை உயர்த்தினார்கள். இதில், ஜெய்ஸ்வால் 161 ரன்களும், ராகுல் 77 ரன்களும் எடுத்தனர்.
அவரைத் தொடர்ந்து, விராட் கோலியும் சிறப்பாக விளையாடி வெகு நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இதனால், இந்திய அணி 487-6 இருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதனால், கைவசம் இரண்டு நாட்களுடன் பேட்டிங் களமிறங்கிய ஆஸி. அணி தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. நேற்றைய நாளே 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி இன்றும் விக்கெட்டுகளை இழந்ததால் மேற்கொண்ட அழுத்தத்திற்கு தள்ளப்பட்டது.
இருப்பினும் ஆஸ்திரேலிய தரப்பில் டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சேல் மார்ஷ் பொறுமையாக விளையாடினார்கள். ஆனாலும், அது அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் மட்மே எடுத்தது.
இதனால், ஆஸ்திரேலிய மண்ணில் அவர்களையே கதிகலங்க வைத்து இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து அங்கும் கில்லி என நிரூபித்துள்ளது.
மேலும், 5 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த தொடருக்கான அடுத்த டெஸ்ட் போட்டியானது வரும் டிசம்பர்-6ம் தேதி அடிலெய்டில் ஓவல் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.