AUS vs IND : ட்விஸ்ட் கொடுக்கும் பும்ரா கேப்பிடன்சி ..! அஸ்வின் இல்லை ..தடுமாறும் இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது.
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. ரோஹித் சர்மா பங்கேற்க முடியாததால், பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸி. அணியை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் கடுமையான போட்டியை முன்வைத்தனர். இதனால், பெரும் சவாலாகவே இந்திய அணிக்கு ஆஸி.அணி இருந்து வருகிறது. அதன்படி, தொடக்கத்திலேயே ஜெய்ஸ்வால், படிக்கல், கோலி என முக்கிய கிரிக்கெட் வீரர்களை இந்திய அணி இழந்தது.
அதன்பிறகு, சற்று நேரம் நிலைத்து விளையாடிய கே.எல்.ராகுலும் 26 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் மோசமாக இந்திய அணி தடுமாறியது. அதன்பின், களத்திற்கு வந்த ஜுரேலும், பண்டும் சிறிது நேரம் விளையாட துரதிஷ்டவசமாக ஜுரேலும் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்நது முதல் செஷன் முடிவடைந்து, இரண்டாவது செக்ஷனில் 73-6 என நிலையில் பண்டும், நிதிஷ் ரெட்டியும் விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ், மிட்ச்சேல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளனர்.
இந்திய அணியின் மாற்றம் என்ன?
இந்திய அணியில் வழக்கம் போல டெஸ்ட் அணியாக இல்லாமல் இந்த போட்டியில் பல மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ரோஹித் சர்மா அணியில் இல்லாதது தெரிந்ததே. அவரைத் தொடர்ந்து, கில் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.
அதே நேரம் ஸ்பின் ஜாம்பவான் அஸ்வினும் இந்த போட்டியில் இடம்பெறவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்து வருகிறது. மேலும், ஆல்-ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இந்த போட்டியில் விளையாடி வருகிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக அவர் களமிறங்கி இருக்கிறார். மேலும், ஐபிஎல் நட்சத்திரம் ஹர்ஷித் ராணாவும் அணியில் இணைந்துள்ளார்.
இந்திய அணி :
கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி :
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட்
பும்ரா கேபிடன்சி :
இந்திய அணி இப்படி மோசமாக பேட்டிங் விளையாடி வருவதால், ஆடுகளம் கடினமாக இருக்கும் என தெரிந்தே எதற்காக பேட்டிங் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், 4 போட்டிகளை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி இருந்து வரும் வேளையில் இப்படி மோசமாக பேட்டிங் விளையாடுவது இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமையும், அது கேப்டனை தான் பாதிக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், நடந்து கொண்டிருப்பது முதல் இன்னிங்ஸ் என்பதால் பரவாயில்லை. மேலும், இந்திய அணி பவுலிங்கிலும் அடுத்து வரும் 2-வது இன்னிங்ஸிலும் கடினமாக போராட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விட்டதை திரும்ப பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளை வென்றால் மட்டுமே அடுத்த வருடம் நடக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.