INDvENG [file image]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் 10 விக்கெட்களை இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து. அதிகபட்சமாக முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ் 70, பேர்ஸ்டோவ் 37, டக்கெட் 35, ரன்கள் எடுத்தனர்.
IndvsEng: சச்சின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!!
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில், ரவீந்திர ஜடேஜா 3, அஷ்வின் 3, அக்சர் படேல் , பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார்கள். இங்கிலாந்து அணியை தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்கிஸை தொடங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் ரோஹித் சர்மா 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்.
அவருடன் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார் என்றே கூறலாம். அவருடைய அதிரடியின் ஆட்டம் காரணமாக இந்திய அணி நல்ல ஸ்கோரையும் எட்டியது. அதன்படி, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை குவித்துள்ளது.
INDvsENG: அனில் கும்ப்ளே ஹர்பஜன் சிங் சாதனையை ஓரம் கட்டிய அஸ்வின் – ஜடேஜா!
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் உள்ளார். அவருடன் களத்தில் சுப்மன் கில் 14 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். முதல் நாள் முடிவில் இந்தியா 127 ரன்கள் பின்தங்கியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்டம் நாளை தொடங்குகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…