இன்று மேல்போன் சர்வதேச மைதானத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா இடையில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது. பேட்டிங் தேர்வு செய்து முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஜோ பர்ன்ஸ், மத்தேயு வேட் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே பும்ரா வீசிய பந்தில் ஜோ பர்ன்ஸ் ரன் எடுக்காமல் வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மார்னஸ் லாபுசாக்னே, மத்தேயு வேட் உடன் கூட்டணி அமைத்து அணியின் எணிக்கையை சற்று உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த மத்தேயு வேட் 30 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய டிராவிஸ் 38 ரன் சேர்த்தார்.
சிறப்பாக விளையாடி வந்த மார்னஸ் அரை சதம் அடிக்காமல் 48 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவரில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு விக்கெட்டுகளையும் பறித்தனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் மயங்க் அகர்வால் ஆட்டம் தொடக்கத்திலேயே ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து புஜாரா களம் இறங்கினார். இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 36 ரன்கள் எடுத்து உள்ளனர்.
தற்போது களத்தில் சுப்மான் கில் 28 ரன்னும், புஜாரா 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…