4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 98 ரன்கள்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர். இறங்கிய இந்திய அணி 100.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்தனர்.
இதன் காரணமாக 94 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி நேற்றைய 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 29 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் எடுத்தனர். இதனால், 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து, இன்று 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணிக்கு 407 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், 407 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மாவும் , சுப்மான் கில் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலிருந்து நிதானமாக விளையாடி வந்தனர். நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 31 ரன்னில் விக்கெட்டை இழக்க பின்னர், சிறப்பாக விளையாடிய துணை கேப்டன் ரோஹித் அரைசதம் விளாசி 52 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக 4-ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளனர். இதனால், இந்திய அணிக்கு நாளை கடைசிநாள் ஆட்டத்தில் 309 ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றிபெறமுடியும். தற்போது களத்தில் புஜாரா 9* மற்றும் ரஹானே 4* ரன்களுடன் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025