2-ம் நாள் முடிவில் 96 ரன்னில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணி..!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடங்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் இருவரும் இறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து, இறங்கி சிறப்பாக விளையாடிய மார்னஸ் சதம் அடிக்காமல் 91 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், ஸ்மித் சதம் விளாசி 131 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து, இறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 338 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியில் ஜடேஜா 4, பும்ரா நவ்தீப் சைனி தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட்டை பறித்தனர். பின்னர், இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் சர்மா இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 26 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின் புஜாரா களமிறங்க ஆட்டம் சில நிமிடங்களில் அரைசதம் அடித்த சுப்மான் கில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
இறுதியாக இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்ட முடிவில் 45ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 96 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் புஜாரா 9* , ரகானே 5* ரன்களுடன் உள்ளனர்.