உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : 2-ஆம் நாள் முடிவில் இந்திய அணி 146/ 3 ..!
இந்திய அணி 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர்.
சவுத்தாம்ப்டனில் தொடர் மழை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், சுப்மான் கில் இருவரும் களமிறங்கி பார்ட்னர்ஷிப் மூலம் 62 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை வழங்கினர். பின்னர், கைல் ஜேமீசனிடம் ரோஹித் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து, கில் 28 ரன்கள் எடுத்த தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய புஜாரா 54 பந்தில் வெறும் 8 ரன்களில் வெளியேறினார்.
பின்னர், களம் கண்ட விராட் கோலி, ரஹானே இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இந்நிலையில், 2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 64.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்துள்ளனர். தற்போது களத்தில் விராட் கோலி 124 பந்துகளுக்கு 44 , ரஹானே 79 பந்துகளுக்கு 29 ரன்களுடன் உள்ளனர்.