இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் குஜராத், அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கிற்கு களமிறங்கினர்.
முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் கேப்டன் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை அளிக்க நினைத்தனர். ஆனால், சுப்மன் கில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி , கேப்டன் ரோகித் சர்மா உடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தார். பின்னர் ரோகித் சர்மா 47 ரன்கள் இருக்கும்போது மேக்ஸ்வெல் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதன் பிறகு களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேற இந்திய அணியின் ரன்வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு விராட் கோலி 54 ரன்களில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 66 ரன்கள் எடுத்த ஸ்டார்க் ஓவரில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அதன் பிறகு களம் இறங்கிய முகமது சாமி 6 ரன்கள் எடுத்திருக்கையில் பெரிய ஷார்ட் அடிக்க நினைத்து அவுட் ஆனார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் அவுட் ஆகினார். முகமது சிராஜ் 9 ரன்கள் எடுத்திருக்க குல்தீப் யாதவ் 10 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அவுட் ஆக, 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தனர்.
50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி அடுத்து களமிறங்க உள்ளது.
ஆஸ்திரேலியா அணி சார்பாக ஸ்டார்க் 10 ஓவர் வீசி 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் எடுத்து இருந்தார். கேப்டன் பேட் கம்மின்ஸ் 10 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆடம் சாம்பா 10 ஓவர் வீசி 44 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்து இருந்தார். ஹஸீல்வுட் 10 ஓவரில் 60ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்து இருந்தார். ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 6 ஓவர் வீசி 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…