அந்த நேரத்தில் என்னுடன் பேச கூட யாருமில்லை, மிக கவலையில் இருந்தேன் – ரோகித் சர்மா..!

Default Image

தற்பொழுது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரோகித் சர்மா அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலை இந்திய மகளீர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ்  நடத்தியுள்ளார். ஜெமிமா 2022 ஆம் ஆண்டிற்க்கான உலக கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே, ரோகித் 20211 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட போது அவருக்கு இருந்த அனுபவத்தை கேட்டறிந்துள்ளார்.

இது குறித்து பேசிய ரோகித் ஷர்மா, அது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. மேலும் நான் அப்பொழுது தென் ஆப்பிரிக்காவில் ஒரு தொடர் விளையாடியதாக எனக்கு நினைவிருக்கிறது. அப்பொழுது நான் ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. ஆனால் அதைப் பற்றி என்னிடம் பேச கூட யாரும் இல்லை.

என்ன தவறு நடந்தது, எதற்காக என்னை நீக்கினார்கள் என்பது கூட தெரியாமல் எனது அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சொல்லப்போனால் அது எனக்கு அந்த நேரத்தில் மிகவும் முக்கியமான ஒன்று.

ஏனென்றால் அப்பொழுது எனக்கு 23-24 வயது தான் இருந்தது எனவும், இதனால் ஒரு மாத காலமாக மன சோர்வுடனும், கவலையுடனும் இருந்தேன். அதன் பின்பாக 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்காக தயாராக தொடங்கினேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்