இனிமேலாவது கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க ..! ஸ்டார் ஸ்போர்ட்ஸை காட்டமாக விமர்சித்த ரோஹித் சர்மா !!

Rohit Sharma, StarSports

சென்னை : ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை காட்டமாக விமர்சித்து தனது X தளத்தில் பதிவிட்டு இருந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.

ஐபிஎல் தொடரில் தற்போது லீக் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், ரோஹித் ஷர்மாவுக்கும் ஒரு நல்ல சீசனாக அமையவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் அணி என்று தான் கூற வேண்டும்.

தற்போது, இந்திய அணி வீரர்கள் வருகிற டி20 போட்டிகளுக்கு தயாராகி கொண்டு இருக்கும் வேலையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ஸை விமர்சித்து காட்டமான ஒரு பதிவை நேற்று தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை தற்போது கிளப்பி வருகிறது.

மும்பை இண்டியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான  தன்னை பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதால், அணியில் இருந்து விலகுவது தொடர்பாக ரோகித் பேசியதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில்,கொல்கத்தா அணியின் பயிற்சியாளரான அபிஷேக் நாயர் உடனான உரையாடல் ஒன்றை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் என்று தான் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கேட்டுக்கொண்டள்ளார், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அதனையும் மீறியும் ஒளிபரப்பு செய்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரோஹித் சர்மா தனது X தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதனை குறித்தது அந்த பதிவில் அவர் கூறுகையில், “தற்போது, கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இதனால், கிரிக்கெட் வீரர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் சரி, அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சரி கேமராக்கள் பின் தொடர்ந்து வருகின்றன.

எங்களுக்கும் தனிப்பட்ட முறையில் நண்பர்களுடனும், சக வீரர்களுடனும் பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கும். நாங்கள் பயிற்சியின் போதும், சரி போட்டியின் போதும்  சரி தனிப்பட்ட முறையில் நிறைய பேசி கொள்வோம். ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் என் பேச்சை மீறியும் நான் பேசியதை பதிவு செய்ததுடன் அதனை நேரலையிலும் ஒளிபரப்பி இருக்கின்றனர். இது என்னுடைய தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு அத்துமீறலாக தான் நான் பார்க்கிறேன்.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் நம்பிக்கை பாதிக்கப்படும் அதனால் தயவு செய்து இனிமேலாவது கொஞ்சம் யோசனை செய்து பண்ணுங்க”, என அவர் பதிவிட்ட அந்த பதிவில் கூறி இருந்தார். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் க்ஷேம் ஆன் யூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (#ShameOnYouStarSports) என்ற ஹாஸ்டாக்கை உருவாக்கி கண்டித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்