இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்ந்து சாதனைகளை குவித்து வரும் நிலையில், 400 விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனையை படைத்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இரண்டாம் நாளிலே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் 34 வயதாகும் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 23 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் அஸ்வின், இந்த டெஸ்ட் போட்டியில் பல சாதனைகளுக்கு சொந்தக் காரராகினார். அந்தவகையில், 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். 2-வது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ், ஓலி போப் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள் வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இவருக்கு முன் முதலிடத்தில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், 72 போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அளவில் அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார். இவருக்கு முன் அணில் கும்ப்ளே 619 விக்கெட்களும், கபில் தேவ் 434 விக்கெட்களும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் எடுத்து முதல் மூன்றிடத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி அஸ்வின், இந்திய அளவில் அதிவேகமாக 400 விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…