#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணி..!
ஆசிய ஹாக்கி டிராபி போட்டியில் 3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில் ஜப்பான் அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மூன்றாவது-நான்காவது இடத்துக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது.இந்திய அணி 3-வது இடத்திற்கான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலத்தை வென்றது. இதற்கு முன் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 3 முறையும், பாகிஸ்தான் அணி (2012,2013,2018) 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர். நடப்பு சாம்பியனான இந்திய அணி இம்முறை மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.