சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். அந்தவகையில், ஆசிய போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் 40 வகையான விளையாட்டுகள் 61 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 13 தங்கப் பதக்கங்கள் உள்பட மொத்தமாக 56 பதக்கங்களை பெற்று, பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் இலங்கையை அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றது ஒன்றாகும். இதன்பின், சீனாவில் ஆண்கள் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றன.
மறுபக்கம், நேபாளம், மாலத்தீவு, மங்கோலியா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 9 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. லீக் ஆட்டங்கள் முடிவில் நேபாளம், ஹாங்காங், மலேசியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த காலிறுதி சுற்றில் வெற்றி பெரும் அணிகள் அரையிறுதி போட்டியை நோக்கி முன்னேறும், இதில் வெற்றி பெரும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
எனவே, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான ஆண்கள் கிரிக்கெட் அணி நாளை காலிறுதி போட்டியில் நேரடியாக களமிறங்கவுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை இந்திய அணி உலக கோப்பையில் விளையாடுவதால், ஆசிய விளையாட்டு தொடரில் பங்கேற்க ருதுராஜ் தலைமையில் 15 இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் வளரும் பல இளம் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் லட்சுமணன் பயிற்சியாளராக இருக்கிறார். எனவே, நாளை தொடங்கும் காலிறுதி சுற்றில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஹங்கொழு நகரில் நேபால் அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
இந்திய அணி : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராகுல் திரிபாதி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான் , அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…