தொடங்கியது ஆசிய கோப்பை தொடர்! டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான்!
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஆசியகோப்பை 2023 தொடர் இன்று தொடங்கியுள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாளத்தை எதிர்கொள்கிறது. போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தானில் நடைபெறுகிறது. இரண்டு அணி வீரர்களும் அட்டகாசமான வீரர்களை கொண்டுள்ளதால் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
விளையாடும் வீரர்கள்
பாகிஸ்தான்
ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(c), முகமது ரிஸ்வான்(wk), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப்
நேபால்
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (wk), பீம் ஷர்கி, ரோஹித் பௌடெல் (c), குஷால் மல்லா, திபேந்திர சிங் ஐரி, குல்சன் ஜா, சோம்பால் கமி, கரண் கேசி, சந்தீப் லமிச்சனே, லலித் ராஜ்பன்ஷி
குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அருமையான பார்மில் இருக்கிறார். இதுவரை 103 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 101 இன்னிங்ஸில் விளையாடியுள்ள பாபர் 5202 ரன்கள் எடுத்துள்ளார். அவரைப்போல வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பக்கபலமாக இருக்கிறார்.
குறிப்பாக, 39 போட்டிகளில் 76 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டிகளில் இவர்கள் அருமையாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும். ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவது நேபாளம் அணிக்கு இதுவே முதல் முறையாகும். அதுவும், கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தான் அணியை சர்வதேச களத்தில் எதிர்கொண்டு விளையாட உள்ளது நேபாளம்.
நேபாளம் அணிக்கு இன்றைய போட்டி சவாலாக இருந்தாலும், 2027-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெறும் கனவுடன், இந்த தொடரில் அனுபவம் வாய்ந்த அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.