Asian Cup 2023 : சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்.!
2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் குரூப் ஏயில் உள்ள பாகிஸ்தான் மற்றும் குரூப் பியில் உள்ள வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியானது இலங்கையில் உள்ள லாகூர் மைதானத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 38.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்கள் எடுத்திருந்தது.
வந்தேச வீரர்கள் தொடர்ந்து குறைவான ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 53 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து முகமது நைம் 20 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் ரன் எதுவும் எடுக்காமலும், லிட்டன் தாஸ் 16 ரன்களும், தவ்ஹித் ஹிரிடோய் 2 ரன்களும்,ஷமிம் ஹொசைன் 16 ரன்களும், அபிஃப் ஹொசைன் 12 ரன்களும் எடுத்து இருந்தனர்.
பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்களையும், நசீம் ஷா 3 விக்கெட்களையும், ஷஹீன் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.
50 ஓவரில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 78 ரன்கள் எடுத்து இருந்தார், முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெற செய்தார். ஃபகார் ஜமான் 20 ரன்களும், பாபர் ஆசம் (கேட்ச்) 17 ரன்களும் எடுத்து இருந்தனர். ஆகா சல்மான் 12 ரன்கள் எடுத்து இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
வங்கதேச அணி சார்பாக தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1விக்கெட் எடுத்து இருந்தனர். இறுதியாக 39.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள்எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.