ஆசிய கோப்பை 2018:விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்த ரோகித் ,தவான் ஜோடி ..!

Default Image

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் அடித்துள்ளது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது.

இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.இதன் பின்னர் 238 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணி  12 ஒவர்களின் முடிவில் 62 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் ரோகித் 21 ரன்கள்,தவான் 40 ரன்களுடன் உள்ளனர்.

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்