நேற்று பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில், துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது.
இந்நிலையில் இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ப்ராஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் அடித்துள்ளது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மாலிக் 78 ரன்கள்,சர்ப்ராஸ் 44 ரன்கள் அடித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் பூம்ரா ,சாகல் மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.இதன் பின்னர் 238 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 39.3 ஒவர்களிள் ஒரு விக்கெட்டை இழந்து 238 வெற்றி இலக்கை எட்டியது.இதனால் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது..களத்தில் ரோகித் 111 ரன்கள்,ராயுடு 12 ரன்களுடன் இருந்தனர்.அதேபோல் தவான் 114 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அனைவரும் சிறப்பாக விளையாடினீர்கள்.போட்டியை நான் ரசித்து பார்த்தேன்.சரியான வெற்றி என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…