ஆசியக் கோப்பை 2018:இந்திய அணியை சிறிது நேரத்தில் கதறவிட்ட ஆப்கான் வீரர் ஷேசாத் ..!சதம் அடித்து சாதனை ..!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் சம்பிரதாய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இந்திய அணி சந்திக்கிறது.
இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 45 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் நபி 52 ,ரஷீத் 2 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத் 124 ரன்கள் அடித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.