ஆசியக் கோப்பை 2018:இந்திய அணி அதிரடி ஆட்டம் ..!ராகுல்,ராயுடு அரைசதம் …!
இந்திய அணி 22 ஓவர்களில் 131 ரன்கள் அடித்துள்ளது.
இந்தியாவுடனான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அப்டாப் 2 ,ரஷீத் 12 ரன்களுடனும் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷேசாத் 124,முகமது நபி 62 ரன்கள் அடித்தார்கள்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகள்,குலதீப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர்.இதையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் தோனி 1,தினேஷ் 8 ரன்களுடன் உள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக ராகுல் 60,ராயுடு 57 ரன்கள் அடித்து விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.