7-வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது .இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்கள் அடித்தது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 121 ரன்கள் எடுத்தார்.மேலும் இது தான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன் ஆகும்.இதனையடுத்து இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேச அணி .
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து இந்திய அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கியது.
இந்திய அணி பொறுத்தவரை இதுவரை 6 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.7-வது முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் வங்கதேச அணி ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் விளையாடி தோல்வியுற்றுள்ளது.இன்னும் சிலமணி நேரங்களில் தெரியும் கோப்பையை வெல்லப்போவது எந்த அணி என்று…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…