ஆசிய கோப்பை 2018 :இன்று இறுதிப்போட்டி ..!பாம்பு ஆட்டம் இந்தியாவிடம் எடுபடுமா..!சாதனைக்காக காத்திருக்கும் வங்கதேச அணி ..!

Published by
Venu

இன்று ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.

Image result for ASIA CUP INDIA VS BANGLADESH

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்திய அணி மட்டும்தான் தோல்வியை சந்திக்காத அணி ஆகும்.ஆப்கான் அணியுடனான போட்டி மட்டும் சமநிலையில் முடிந்துள்ளது.

வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை வெளியேற்றி அசுர பார்மில் உள்ளது. இதனால் இரண்டு அணிகளும் கடுமையாக போராடினால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.இந்திய அணி இதுவரை 6 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.7-வது முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் வங்கதேச அணி ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் விளையாடி தோல்வியுற்றுள்ளது.

இந்திய அணி வீரர்கள் விவரம் :தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே

வங்காளதேச அணி வீரர்கள் விவரம் :மோர்தசா (கேப்டன்), லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், முஸ்தாபிஜூர் ரகுமான், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன்,  ருபெல் ஹூசைன்.

இந்த போட்டி  இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.  இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.

Published by
Venu

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

30 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

2 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

12 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

13 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

14 hours ago