ஆசிய கோப்பை 2018 :இன்று இறுதிப்போட்டி ..!பாம்பு ஆட்டம் இந்தியாவிடம் எடுபடுமா..!சாதனைக்காக காத்திருக்கும் வங்கதேச அணி ..!
இன்று ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்துள்ளது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.இந்த தொடரில் இந்திய அணி மட்டும்தான் தோல்வியை சந்திக்காத அணி ஆகும்.ஆப்கான் அணியுடனான போட்டி மட்டும் சமநிலையில் முடிந்துள்ளது.
வங்கதேச அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை வெளியேற்றி அசுர பார்மில் உள்ளது. இதனால் இரண்டு அணிகளும் கடுமையாக போராடினால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.இதில் வெற்றி பெறும் அணி கோப்பையை கைப்பற்றும்.இந்திய அணி இதுவரை 6 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.7-வது முறையாக கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மேலும் வங்கதேச அணி ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் விளையாடி தோல்வியுற்றுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் :தோனி (கேப்டன் ),ராகுல்,ராயுடு,கேதார் ஜாதவ்,தினேஷ் ,குல்தீப்,ஜடேஜா,தீபக் சாஹர், சித்தார்த் கவுல், கலீல் அகமது,மனிஷ் பாண்டே
வங்காளதேச அணி வீரர்கள் விவரம் :மோர்தசா (கேப்டன்), லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், முஸ்தாபிஜூர் ரகுமான், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், ருபெல் ஹூசைன்.
இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றது.