ஆசியக் கோப்பை 2018 இறுதிப்போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி ..! வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் தேவை..!

Published by
Venu

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து  தடுமாறி வருகின்றது.

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது.

இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது .இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்கள் அடித்தது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 121 ரன்கள் எடுத்தார்.மேலும் இது தான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன் ஆகும்.இதனையடுத்து இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேச அணி .

 

இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து இந்திய அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கியது.

பின்னர் இந்திய அணி  35  ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் அடித்தது.களத்தில் தோனி 35,கேதார் 12 ரன்களுடனும் உள்ளார்கள்.தொடக்க வீரர் தவான் 15,ராயுடு 2 ,ரோகித் 48,கார்த்திக் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.இந்திய  அணியின் வெற்றிக்கு இன்னும் 69 ரன்கள் தேவைப்படுகிறது.

Published by
Venu

Recent Posts

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

26 minutes ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

51 minutes ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

1 hour ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

2 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!

சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…

2 hours ago

அன்புமணி vs ராமதாஸ் : “உனக்கு விருப்பம் இல்லைனா அவ்வளவு தான்”..மேடையில் நடந்தது என்ன?

புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…

3 hours ago