ஆசியக் கோப்பை 2018 இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்கு ..!தாஸ் அபார சதம் ..!
இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேச அணி.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிந்து ‘சூப்பர் 4’ சுற்று முடிவடைந்தது.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றது .இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதன் பின்னர் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி 48.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்கள் அடித்தது.வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டான் தாஸ் 121 ரன்கள் எடுத்தார்.மேலும் இது தான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ரன் ஆகும்.இதனையடுத்து இந்திய அணிக்கு 223 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது வங்கதேச அணி .
இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3,ஜாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.இதனையடுத்து இந்திய அணி 223 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்க உள்ளது.