ஆசிய கோப்பை 2018:சதம் அடித்த தவான் …!விராட் கோலி சாதனை நெருங்கினார் தவான் …!
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஹாங்காங் அணியுடனான ஒரு நாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் தொடங்கியது.
இன்று 18 ஆம் தேதி இந்திய அணிக்கு ஹாங்காங் அணியுடன் விளையாட உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் ஒரு போட்டிகளில் தனது 14 வது சதத்தை அடித்துள்ளார்.105 பந்துகளில் சத்தம் அடித்தார்.
பின்னர் 127 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.இருந்தாலும் சதம் அடித்ததன் மூலம் தவான் ஒரு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.அது என்ன சாதனை என்றால் ஒரு நாள் போட்டிகளில் குறைந்த போட்டிகளில் 14 சதம் அடித்த பட்டியலில் தவான் இணைந்துள்ளார்.இவர் 105 இன்னிங்சில் 14 சதம் அடித்ததன் மூலம் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.இந்த பட்டியலில்தென் ஆப்பிரிக்கா வீரர் அம்லா 84 இன்னிங்சில் 14 சதங்களை அடித்து முதலிடத்தில் உள்ளார்.அதேபோல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 98 இன்னிங்சிலும்,இந்தியாவின் விராட் கோலி 103 இன்னிங்சிலும் 14 சதங்கள் அடித்துள்ளனர்.இவர்களுக்கு அடுத்த படியாகத்தான் தவான் 105 இன்னிங்ஸ்சுடன் 4 ஆம் இடத்தில் உள்ளார்.