AsiaCupFinal : இன்று நடைபெறுகிறது இறுதிப்போட்டி! இந்தியாவை வீழ்த்த இலங்கை போட்ட மாஸ்டர் பிளான்?

Published by
பால முருகன்

இன்று நடைபெறும் 2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணியும் இலங்கை கிரிக்கெட் அணியும் மோதுகிறது.

ஆசியக் கோப்பை 2023 இறுதிப்போட்டி 

2023 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று (செப்டம்பர் 17 ) பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதுகிறது. நடந்து முடிந்த சூப்பர் 4 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதைபோல், இலங்கை அணிபாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் முன்னேறியது.

நேருக்கு நேர் 

இரண்டு அணி வீரர்களும் கோப்பையை வெல்லவேண்டும் என்பதற்காக தீவிரமான முனைப்பில் இருக்கிறார்கள். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி 7 முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. அதைப்போல, இலங்கை அணியும் 6 முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கூட இலங்கை அணி தான் கோப்பையை வென்றது.

இரண்டு அணியும் சம பலத்துடன் இருப்பதால் இன்றயை போட்டி சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இலங்கை அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் 8 போட்டிகளில் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிகளில் மோதியுள்ளது. இதில்,5 முறை இந்திய அணியும், 3 முறை இலங்கை அணியும் மோதியுள்ளது.

இன்று விளையாடும் வீரர்கள்

இந்தியா : ரோஹித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் (wk), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமார் யாதவ் , ஷ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா

இலங்கை : பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ்(wk), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷனக(c), துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமந்த, கசுன் ராஜித, பினுர பெர்னாண்டோ, திமுத் கருணாரத்ன

இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ஓய்வுபெற்று இருந்தார்கள். அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் மாஸ்டர் பிளான் 

இன்று இந்தியை அணியை இலங்கை அணி எதிர்கொள்ளவுள்ள நிலையில், இலங்கை அணியின் கேப்டன் இந்திய அணியை வீழ்த்துவதற்கு திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கேப்டன் தசுன் ஷானகா ” எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது. எங்கள் தரப்பில் தரமான சுழற்பந்து வீச்சாளர்களும் உள்ளனர். அதைப்போல இந்திய அணியிலும் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இன்று போட்டி சவாலாக இருக்கும் என நான் நினைக்கிறன்.

ஆடுகளங்கள் சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதைப்போல பந்துவீச்சு ஒரு சவாலாக இருக்கும்.  எனவே, இன்று நடைபெறும் போட்டியில் எந்த அணி வேண்டுமானலும் வெற்றிபெறலாம். ஆனால், ஐபிஎல் விளையாடக்கூடிய திறமையான வீரர்கள் எங்களிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இந்திய அணியை வீழ்த்துவதற்கு எங்களிடம் சில திட்டங்கள் இருக்கிறது” எனவும் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

குழந்தைகளுக்கு பிடித்த எக் மக்ரோனி அசத்தலான சுவையில் செய்வது எப்படி.?

சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்;…

50 minutes ago

சென்னையில் கனமழை! தண்டவாளத்தில் சூழ்ந்த மழைநீர் – மின்சார ரயில்கள் நிறுத்தம்!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள "ஃபெஞ்சல்" புயலானது மேற்கு திசையில் நகர்ந்து சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர்…

1 hour ago

அமரன் OTT: ரிலீஸ் தேதியை உறுதி செய்த நெட்ஃபிக்ஸ்! எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது…

1 hour ago

தமிழகத்தில் இந்த 9 மாவட்டங்களில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830…

2 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல்? ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்த குற்றச்சாட்டு!

பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில்…

2 hours ago

இனிமேல் தான் இருக்கு ஆட்டம்… தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.!

சென்னை: வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது.…

2 hours ago